#235 கண்ணே இன்று கல்யாணக் கதை - ஆணழகன்

படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஸ்வர்ணலதாஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
...
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

பெ.குழு: ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
ஓஹோ.. ஓ ஹோ.. ஓ ஹோ ஓஓ..
...
ஆ1: கோடைக்கானல் சாரலில்..
ஆ2: ஆ.. ஆ.. ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆ1: கோடைக்கானல் சாரலில் குறிஞ்சியொன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது
பெ: ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: உள்ளது யாவும் என்னைச் சேர்ந்த சீதனம்
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: உன்னால் சின்னச் சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆ1: பெண்ணே.. தமிழ்ப் பண்ணே.. இன்று சொல்வாய் புது ராகமே

பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
பெ: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
ஆ1: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
பெ: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று
பெ: ஆ..
...

பெ.குழு: தகதத்தம் தத்தகதம் தகதத்தம்.. தகதத்தம் தத்தகதம் தகதத்தம்..
...
பெ: நீயில்லாத நாளெல்லாம்..
பெ.குழு: ஆ.. ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆ..
பெ: நீயில்லாத நாளெல்லாம் நெருஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம் நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆ1: எத்தனை காலம் பாவம் இந்தத் தொல்லையோ
ஆ1&பெ.குழு: ஓஓஓ ஓ
ஆ1: என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ
பெ.குழு: ஓ.. ஓ..
பெ: என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு
பெ&பெ.குழு: ஓஓஓ ஓ
பெ: கற்பகச் சோலை காய்ந்திடாமல் நீர் விடு
பெ.குழு: ஓ.. ஓ..
ஆ1: வந்தேன்.. என்னைத் தந்தேன்.. உன்னைக் கொண்டேன்.. இது போதுமா
பெ: தொட்டால்.. விரல் பட்டால்.. நெஞ்சின் உள்ளே அலைமோதுமா

ஆ1: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
பெ: பன்னீர்ப் பூவே வா வா.. செந்தேன் வேண்டும் தா தா..
ஆ1: முத்துப் பல்லக்கிலே இந்தத் தத்தை ஆடி வர
பெ: கண்ணே.. இன்று கல்யாணக் கதை கேளடி
பெ.குழு: கேளடி
ஆ1: அன்பே.. இன்று பொன்னான திருநாளடி
பெ.குழு: நாளடி
...

0 மறுமொழிகள்:

Post a Comment