#236 மானே மரகதமே - எங்க தம்பி

படம்: எங்க தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & எஸ். ஜானகி: மானே.. மரகதமே..
...
: மானே.. மரகதமே..
...
: மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது.. பனி தூவும் மாலை வேளைதான்
மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது.. பனி தூவும் மாலை வேளைதான்
மானே.. மரகதமே..
...

: நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி
பெ: பூவும் வெச்சு.. பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி
: பாசம் வச்சு பாடும் பாட்டைக் கேளடி என் கண்மணி
பெ: உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்
: மனசுக்குள் கோயில் கட்டி மகராசி உன்ன வச்சு
பொழுதானா பூசை பண்ணி வாழுறேன்

பெ: தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
: இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது
பெ: பனி தூவும் மாலை வேளைதான்
: மானே.. மரகதமே..
...

பெ: ராகம் வெச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
: மோகம் வெச்சு கன்னி உந்தன் பேரைத்தான் கூறுது
பெ: தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது.. நன்னாளிது
: நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில்தானடி கண்கள் உன்னைக் காணுது
பெ: அழகான தென்னஞ்சிட்டே.. இனிமேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

: மானே.. மரகதமே.. நல்ல திருநாளிது.. தென்றல் தமிழ் பாடுது
பெ: இளவேனில் காலம் இது.. இதமான நேரம் இது
: பனி தூவும் மாலை வேளைதான்
பெ: தேனே.. திரவியமே.. நல்ல திருநாளிது
: தென்றல் தமிழ் பாடுது

0 மறுமொழிகள்:

Post a Comment