#241 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா

படம்: கிளிப்பேச்சு கேட்க வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகிஓ.. ஒ ஒ ஓ.. ஓ.. ஒ ஒ ஓ..
ம் ம்ம்.. ம் ம்ம்.. ம் ம்ம்..
...
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

பொற்சதங்கை சத்தமிட.. சிற்பமொன்று பக்கம் வர
ஆசை தோன்றாதோ
விற்புருவம் அம்பு விட.. வட்ட நிலா கிட்ட வர
ஆவல் தூண்டாதோ
வானம் நீங்கி வந்த மின்னற் கோலம் நானே
அங்கம் யாவும் மின்னும் தங்கப் பாளம்தானே
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

மந்திரமோ தந்திரமோ.. அந்தரத்தில் வந்து நிற்கும்
தேவி நான்தானே
மன்னவனே உன்னுடைய பொன்னுடலைப் பின்னிக் கொள்ளும்
ஆவி நான்தானே
என்னைச் சேர்ந்த பின்னால் எங்கே போகக் கூடும்
இங்கே வந்த ஜீவன் எந்தன் சொந்தம் ஆகும்
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. இங்கே ஓர் தேவதை தேவதை
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

0 மறுமொழிகள்:

Post a Comment