#246 கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ.குழு: பாபப பாபப..
: தாதத தாதத..
பெ.குழு: நீநிநி நீநிநி..
: ஸாஸஸ ஸாஸஸ..
பெ.குழு: நிரிகரி நிதபம கமபம கரிஸநி
: தப நித ஸாநி ரிஸ ரிகமப
பெ.குழு: தப நித ஸாநி ரிஸ நிதபம பா..
...
: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: அம்பா சாம்பவி சந்த்ரமௌலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவாத்ரிநயனா காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயௌவனா சுபஹரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
...

: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றஞ்சொல்லுமா
பெ: கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ்சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
: வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
பெ: சாஸ்திரம் தாண்டித் தப்பிச் செல்வதேது

: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
 கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: பூவே.. பெண் பூவே
இதிலென்ன அதிசயம்
இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம்
இவன் மனம் புரியலையா
...
பெ: ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
: உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பமெல்லாமே இருவருக்கும்
பெ: என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
: ரெண்டா.. ஏது.. ஒன்றுபட்டபோது

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
: ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
: கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

0 மறுமொழிகள்:

Post a Comment