#250 பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
...
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
...

சேலை மூடும் இளஞ்சோலை.. மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை.. மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
ஹேஹே.. இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்.. இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
...

காமன் கோயில் சிறைவாசம்.. காலை எழுந்தால் ihikhik பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம்.. காலை எழுந்தால பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
ஏஹே.. வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
ஹேஹே.. இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரம்
பனி விழும் மலர்வனம்.. பனி விழும் மலர்வனம்
பனி விழும் மலர்வனம்
...

0 மறுமொழிகள்:

Post a Comment