#243 சந்திக்கத் துடித்தேன் பொன்மானே - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிபெ.குழு: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்..
ம்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ம்ம் ம்ஹும்..
...
பெ: ஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா

ஆ: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆ. ஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
தனன தீம்த திரனா.. தன திரன.. தனன தீம்த திரனா.. தன திரன..
தனன தீம்த திரனா.. தன திரனா.. தா.. ஆஆஆ ஆ..
...

பெ: முன் வைத்த காலைப் பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா
: இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிக்கின்றதா
பெ: அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா
: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெ: ஜீவன் தவிக்கின்றதா.. தேகம் கொதிக்கின்றதா

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆ..
...
: கங்கையைத் தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
பெ.குழு: ஸதகரி ஸதகரி நிதபம கமகம பதநித ககபம கரிஸத ரிரிஸ கரிமக பா
ரிரிஸ கரிமக பா
பெ: காதலின் நதிகள் கலக்கத் துடித்தால் மேடு தடுக்கின்றதோ
: நதிகள் இரண்டும் தாகமெடுத்து
நதிகள் இரண்டும் தாகமெடுத்து.. குடிக்கத் துடிக்கின்றதோ
பெ: காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
: பெண்மை சிலிர்க்கின்றதோ.. பேசத் தவிக்கின்றதோ

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
பெ: ம்ம்ம் ம்ம் ம் ம்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment