#191 ஒரு குங்குமச் செங்கமலம் - ஆராதனை

படம்: ஆராதனை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: ஒரு குங்குமச் செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்.. தர வேண்டும் கமலம்.. உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்..
...

பெ: ஆ ஆ ஆ.. ஆஆஆ..
...

: திருவாய் மலர்வாய்.. தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்கத் தனியாவாய்
பெ: ஆஆஆஆஆ..
: காயைப் புசிக்கும் கனியாவாய்
பெ: ஆஆஆஆஆ..
: பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்.. மின்னலிலே
பெ: லால்லலலா..
: ஒரு கயிறு எடு
பெ: லாலலலா..
: மேகங்களால் ஒரு தூளியிடு
கதிரோ.. தளிரோ.. இளமகளது திருமுகம்

பெ: லாலல லாலல லா.. லல லாலல லாலல லா..
லலலாலல லா லல லா..
...

பெ: லல்லல லல்லல லல்லல லல்லா..
லல்லல லல்லல லல்லல லல்லா..
ஆஹா.. ஆஹா.. லாலலா லாலா..
ஆஹா.. ஆஹா.. லா லாலலா..
...

: முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
பெ: ஆஆஆஆஆ..
: மடியில் தவழும் மகன் பிள்ளை
பெ: ஆஆஆஆஆ..
: நீயேந்திக் கொஞ்ச.. நான் கொஞ்சம் கெஞ்ச
பெ: ihikhik
: பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச.. பாயதனில்
பெ: லாலலலா..
: நீ சாய்ந்திருக்க
பெ: லாலலலா..
: பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

: குங்குமச் செங்கமலம்
பெ: ஆ..
: இள மங்கையின் தங்க முகம்
பெ: ஆ..
: பசி தூண்டும் அமுதம்
பெ: ஆ..
: தர வேண்டும் கமலம்
பெ: ihikhik
: உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம்
பெ: ஆ..
: இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்..
பெ: லால்லா லால்லா லா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment