#183 விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & சசிரேகா


பெ2: ஸ க ம ப நி ஸா..
ஸா நி ப ம க ஸ..
மமபா பப பா.. கமப கமக ஸா..
நிநிஸ காக கஸஸா.. நிநிஸ காக மமபா..
ஸாஸ நிநி பாப மாம காக ஸாஸ நிநி ஸா..
: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில்
&பெ: வந்துவிடு
பெ: அலைகள் உரசும் கரையில் இருப்பேன்.. உயிரைத் திருப்பித் தந்துவிடு
...

பெ: தனன னனன னனன னனன னனன னனன னனனா..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்.. உயிரைத் திருப்பித் தந்துவிடு
தனன னனன னனன னனன னனன னனன னனனா..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
...
: தகதோம் தகதோம் தகதோம் தகதோம்.. தகதகதகதகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்.. தகதகதகதகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்..
தகதோம் தகதோம் தகதோம் தகதோம்..
...

பெ: உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

பெ: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
...

பெ: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின்போது
அலையின் கரையில் காத்திருப்பேன்.. அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்
...

2 comments:

  1. நல்ல பாடல்:) நிலாவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :)

      Delete