#193 துள்ளி எழுந்தது பாட்டு - கீதாஞ்சலி

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் nangihஅதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. nangih சின்னக் குயிலிசை கேட்டு nangih
: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

: உயிரே.. ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது
அழகே.. புது ஆசை வெள்ளம் அணை தாண்டித் தாவுது
மலரே.. தினம் மாலை நேரம் மனம்தானே நோவுது
மாலை முதல்..
மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

: அடியே.. ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது
கிளியே.. பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்..
நான் தேடிடும் ராசாத்தியே.. நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே.. இதோ அழைக்கிறேன்

: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

1 comment:

  1. குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது

    ReplyDelete