#192 வான மழை போலே - இது நம்ம பூமி

படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்


ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம் ம்.. ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம்..
ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம் ம் ம்..
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்புப் பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

மா.. கம தநிதா.. கம கதநி..
தநி ஸாநி நிப பக கஸ ஸநி நித
தஸா மதா நி பா க ஸா
...
குரலில் தேன் குழைத்துக் குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்.. அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்கக் குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

0 மறுமொழிகள்:

Post a Comment