#206 பொடி நடையாப் போறவரே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

பொடி நடையா.. போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹோய்..
...
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்

வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு

உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
ஒரு மஞ்சளக் கட்டி மேய்ச்சா எங்கேயும் போகாது

வேணாய்யா வீராப்பு.. ஹேய்..
...

இறுக்கிப் பிடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சுகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள

சங்கதி ஒண்ணா ரெண்டா.. ஜாதகம் பார்ப்போம் கொண்டா
குத்தத்தைப் பார்த்தாக்கா சொந்தமில்ல
கோவத்தைப் பார்த்தாக்கா பந்தமில்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க.. சிறுக்கியத்தான் பொறுத்துக்குங்க

பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ர்ர்ர்ர்ர்
...

பாக்கு வெத்தலை மடிச்சு உனக்குக் கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லியப்பூவ எடுத்துத் தொடுக்கட்டுமா

உன்ன நான் புள்ளி வச்சேன்.. ஊருக்குச் சொல்லி வச்சேன்
வாங்கினா ஒந்தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஒம்மாலை தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா.. மனசிலென்ன வருத்தமய்யா

பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
ஒரு மஞ்சளக் கட்டி மேய்ச்சா எங்கேயும் போகாது
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹோய்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment