#201 வானுயர்ந்த சோலையிலே - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
பெ: ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆ..
...
: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த சோலையிலே..
...

: வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிலென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிலென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்

வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

பெ: ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
...

: ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்துப் பூங்குழலில் சூடி வைத்துப்
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

0 மறுமொழிகள்:

Post a Comment