#204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

பெ: ஆஆஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..
...

பெ: சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
: பக்கம் வந்து பார்த்துச் சொல்ல றெக்கை இல்லை இப்போது
பெ: காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வந்து சேரவில்ல
: வார்த்தை வந்து சேர்ந்தபோது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பெ: பூசைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது
: கத்துத் தந்த கண்ணே.. உன்னை குத்தஞ்சொல்லக் கூடாது
மனம் தாங்காது.. ஓ ஓ ஓஓஓஓஓ

பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
...

: கண்ணே.. இது ஊமைக் காதல்.. காத்திருந்து நொந்தேனே
பெ: தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
: காத்திருந்து ஆனதென்ன.. கண்ணீர் வத்திப் போனதென்ன
பெ: தேர் முறிஞ்சு போன பின்னே தெய்வம் வந்து லாபமென்ன
: என்ன சொல்லி என்ன பெண்ணே.. என்னைச் சுத்தி ஏகாந்தம்
பெ: பாறாங்கல்லில் முட்டிக் கொண்டு முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்..

: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

0 மறுமொழிகள்:

Post a Comment