#180 தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


பெ.குழு: ஓஓ.. ஓஓஓ ஓஓ ஓ..
ஓஓ ஓஓஓஓ.. ஓஓ ஓஓஓஓ.. ஓஓஓ..
...
பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்..
...

: மாமர இலை மேலே..
ஆஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெ: ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தித் தாலாட்டவோ
: நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: லல்லல்ல லலலல லா..
லல்லல்ல லாலல்லல்லா.. லல்லல்ல லாலல்லா..
...

பெ: ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
பெ: மாதுளங்கனியாட.. மலராட.. கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெ: மேலும் மேலும் மோகம் கூடும்
: தேகம் யாவும் கீதம் பாடும்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

பெ: தூங்காத விழிகள் ரெண்டு
: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
: ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
&பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

0 மறுமொழிகள்:

Post a Comment